Pages

Wednesday, June 30, 2010

இறுதியான அரசியல் தீர்வைக் காண்பதற்குக் காலமெடுக்குமெடுக்கும் ‐ மகிந்த ராஜபச்ச ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம்,


Wednesday, June 30, 2010

இறுதியான அரசியல் தீர்வைக் காண்பதற்குக் காலமெடுக்குமெனவும் உடனடியாகத் தயாரிக்கப்படும் நூடில்iஸைப் போன்று அதனை மேற்கொள்ள முடியாது எனவும் மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு அளித்த பேட்டியின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


தீர்வுக்கு நாங்கள் போதியளவு காலப்பகுதியை எடுத்துக் கொள்வோம். உடனடி நூடில்ஸ் போன்று உடனடித் தீர்வை நீங்கள் கேட்க முடியாது. அரசியலமைப்புக்கள் ஓரிரு நாட்களுக்குரியவை அல்ல. அரசியலமைப்பானது வாராந்தமோ மாதாந்தமோ பிரசுரிக்கப்படும் சஞ்சிகை அல்ல. அடிக்கடி அரசியலமைப்பை எங்களால் மாற்ற முடியாது. நாங்கள் எமக்கு வேண்டிய காலப்பகுதியை எடுக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக நாங்கள் அதனை மாற்றுவோம். இதில் நான் தொடர்ந்தும் உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


அலரிமாளிகையில் ரைம்ஸ் ஒவ் இந்தியா நிருபர் கே.வேங்கடரமணனுக்கு ஜனாதிபதி அளித்த விரிவான பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேட்டி கீழே தரப்படுகிறது.

கேள்வி: நாட்டில் உங்கள் செல்வாக்கு அதிக உயர்மட்டத்திலுள்ளது. ஆனால், நாட்டைப் பற்றிய சர்வதேசப் பிரதிமை குறித்தும் வெளிநாட்டில் உங்களது தனிப்பட்ட பிரதிமை குறித்தும் நீங்கள் கவலையடையவில்லையா?


பதில்: நான் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்தியாவும் ஏனைய அயலவர்களும் என்னுடன் நல்ல விதத்தில் உள்ளனர். அது எனக்குப் போதும்.


கேள்வி: மனித உரிமைகள் நிலைவரம் குறித்து பாரதூரமான கருத்துகளை ஐ.நா. தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குப் பலர் அழைப்பு விடுத்திருக்கிறார்களே?


பதில்: நாட்டு நிலைமை குறித்து அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். உலகின் மோசமான பயங்கரவாதி என பிரபாகரனை முன்னர் அவர்கள் கூறியிருந்தார்கள். இப்போது திடீரென நான் அவரைத் தோற்கடித்த பின்னர் அவர்கள் வித்தியாசமான முறையில் கதைக்கின்றனர். பின்லேடன் தோற்கடிக்கப்பட்டிருந்தால் இதனை அவர்கள் கூறுவார்களா? என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அவர்கள் எமக்கு ஆலோசனை வழங்க முடியும். ஆனால், எம்மை நிர்ப்பந்திக்க முடியாது. இதனைச் செய்,அதனைச் செய் என்று ஒருவரும் எம்மை வற்புறுத்த முடியாது.


கேள்வி: அரசியல் தீர்வைக்காணும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம்,இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தங்களை அடிக்கடி கேட்கின்றது. இந்த விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன மாதிரியாகவுள்ளது.


பதில்: தீர்வைக் காண்பதற்கு எமக்குத் தேவையான நேரத்தை நாம் எடுப்போம். உடனடி நூடில்ஸ் போல உடனடித் தீர்வை நீங்கள் கேட்க முடியாது. அரசியலமைப்பானது ஓரிரு நாட்களுக்குரியதல்ல. வாராந்தம் அல்லது மாதாந்தம் பிரசுரிக்கப்படும் சஞ்சிகையும் அல்ல. அடிக்கடி அரசியலமைப்பை எம்மால் மாற்ற முடியாது. நாங்கள் அதற்குரிய காலத்தை எடுக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக இவற்றை நாம் மாற்றுவோம். இதில் நான் தொடர்ந்து உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறேன்.


கேள்வி: இலங்கைக்கான ஜி.எஸ்.பி. சலுகையை இடைநிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளதே?


பதில்: நான் கவலைப்படவில்லை. கடல்கோளின் பின்னரே இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது கடல்கோள் (புனர்வாழ்வு) முடிவடைந்து விட்டது. இச்சலுகைகள் அந்தத் தருணத்தில் எமக்கு உதவின. இப்போது நாங்கள் புதிய சந்தைகளைக் கண்டுகொள்வது அவசியம். எமது மக்கள் இதனை அறிந்துகொள்வது அவசியம். நான் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த தருணத்தில் அவர்கள் (ஐரோப்பிய ஒன்றியம்) தீர்வைச் சலுகையை இடைநிறுத்துவதற்கான அழைப்பை உடனடியாக விடுத்திருந்தனர். இது அரசியல் ரீதியான தன்மை கொண்ட தீர்மானமாகும். இச்சலுகைகளை வழங்க விரும்பாவிடின், அவர்களே அதனை வைத்திருக்கட்டும். நான் அதனை விரும்பவில்லை. நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்பது தொடர்பாக அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளோம். இப்போது நாங்கள் இதனை (விசாரணை ஆணைக்குழு) நியமித்துள்ளோம். மற்றவர்கள் விரும்பியதால் அல்ல. ஏனெனில் இதில் நான் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டினாலாகும். கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றியது அந்த ஆணைக்குழுவாகும். தேசிய நல்லிணக்கத்திற்காக வேறு எதனைச் செய்ய வேண்டும்.


கேள்வி: இந்த விடயத்தில் நீங்கள் உங்களுக்குரிய அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும். இந்த மோதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்னவென நீங்கள் கூறுவீர்கள். தேசிய நல்லிணக்கம் தொடர்பாக நீங்கள் முன்வைக்கும் சிபாரிசுகள் என்ன?


பதில்: மக்கள் பரஸ்பரம் ஒவ்வொருவரையும் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும். 30 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். இன்று அவர்கள் சிறுபான்மையாக சுமார் 27 வீதமாகவுள்ளனர். இப்போது அதிகளவு தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். ஆனால், இதனை நான் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. மக்கள் கலந்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இதனால் முன்னரும் பிரச்சினை இருந்திருக்கவில்லை. இந்த விடயங்களை உருவாக்குவோர்கள் அரசியல்வாதிகளே.


கேள்வி: வட,கிழக்கு முழுமையாக சிங்கள மயமாக்கப்படும் என்ற அச்சம் காணப்படுகிறது. பெருந்தொகை சிங்கள மக்கள் அந்தப் பகுதிகளில் குடியேற்றப்படுவார்களா?


பதில்: அவர்கள் அங்கிருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் பிரபாகரனால் துரத்தப்பட்டனர். எவராவது அங்கு போக விரும்பினால் அவர்களால் முடியும். கொழும்புக்கு தமிழர்கள் பெரும் எண்ணிக்கையாக வந்திருக்கிறார்கள் என்று எவராவது சொல்லியிருந்தால்?


கேள்வி: இலங்கையில் 25 ஆயிரம் சீனத் தொழிலாளர்கள் உள்ளனர் என்பதில் உண்மையுள்ளதா?


பதில்: எவ்வாறு இத்தொகை 25 ஆயிரமாக இருக்க முடியும். பல்தொழில்நுட்ப வல்லுநர்கள் சீனர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். அவர்கள் இங்கு நீண்டகாலமாகவுள்ளனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின்; ஆட்சியின்போது அவர் இந்த நாட்டை சீனாவுக்கு விற்றுவிட்டதாக எதிரணியினர் பிரசாரம் செய்தமை எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. இந்த பல் தொழில்நுட்பவியலாளர்களின் புகைப்படங்களுடன் எதிரணியினர் பிரசாரங்களை மேற்கொண்டனர். இப்போதும் சீனா,சீனா என்று அதேவிதமான தொனியில் பிரசாரங்கள் இடம்பெறுவதாக நான் உணர்கிறேன். ஏனையோர்கள் இந்தியா,இந்தியா என்று கூறுகின்றனர். நாங்கள் இந்தியாவுக்கு நாட்டை விற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். இந்தியாவுக்கு நாங்கள் விற்கிறோம் என்று ஜே.வி.பி. கூறியுள்ளது.


கேள்வி: இத்தகைய மாற்றங்களின் மத்தியில் சீனாவுடனான தங்களின் உறவுகள் எங்கே இருக்கின்றது என்பது பற்றி நீங்கள் பார்ப்பது எவ்வாறு?


பதில்: நாங்கள் அணிசேரா அமையத்தைச் சேர்ந்தவர்கள். எமது அயலவர்கள் இந்தியர்கள். அசோகச் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்தே இந்தியர்கள் எமது உறவினர்கள் என்று நான் எப்போதும் கூறுகிறேன். அந்தக் கலாசாரத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். கடந்த 2500 வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட கலாசாரம்,நீர்ப்பாசனம்,கட்டிடக்கலை என்பன அந்தக் கலாசாரத்தின் அடிப்படையைக் கொண்டதாகும். அதனை உடைக்க முடியாது. ஆனால், இதனடிப்படையில் ஏனையவர்களிடமிருந்து நாங்கள் வர்த்தக ரீதியான அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதென்பது என்று அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. சீனாவோ,ஜப்பானோ,வேறு எவரோ அவர்கள் இங்கு வருவார்கள். நிர்மாண நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் அவர்கள் திரும்பிப் போவார்கள். இந்தியா இங்கு வருகிறது. அவர்கள் கட்டியெழுப்புவார்கள். அவர்கள் இங்கே இருப்பார்கள். இது தான் வித்தியாசம். சாதாரண முறையில் கூறினால் இந்தியாவுடனான எமது உறவு பலமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கும்போது இந்தப் பிரசாரம் ஆரம்பமாகிறது. இந்தியா ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறதென அவர்கள் கூற ஆரம்பித்துவிடுவார்கள். பாகிஸ்தான் அல்லது சீனா தொடர்பாக இந்தியா மிகவும் உணர்வுபூர்வமான தன்மையைக் கொண்டிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதனால் இந்த விடயங்களை இந்திய மக்களைக் குழப்புவதற்காக பயன்படுத்துவார்கள். இதனை புலிகளும் பயன்படுத்தினர் என்று நான் நினைக்கிறேன்.


கேள்வி: தங்களின் இந்தியாவுக்கான அண்மைய விஜயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வது குறித்து கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பதில்: இது மிகவும் வெற்றிகரமான விஜயமாகும். உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றில் அநேகமானவை அபிவிருத்திப் பணிகளுடன் தொடர்புபட்டவையாகும். வடக்கில் உள்சார் கட்டமைப்பு,புகையிரதப் பாதைகள், வீட்டுத் திட்டங்கள்,அனல் மின்னுலை என்பவற்றை உள்ளடக்கியவையாகும். இந்த நாட்டின் அபிவிருத்திக்கு இவை முக்கியமானவையாகும்.


கேள்வி: இந்தத் திட்டங்கள் சுமார் 23 வருடங்களுக்குரியவை. ஆயினும் அதிகளவு முன்னேற்றம் இடம்பெறவில்லை. இப்போது பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன என நீங்கள் கருதுகிறீர்களா?


பதில்: எனக்கு அதிகளவு நம்பிக்கையுண்டு. நாம் இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். முன்னர் பயங்கரவாதப் பிரச்சினை இருப்பதால்தான் தாமதமடைகிறதென எம்மால் கூற முடிந்தது. இப்போது அவ்வாறு கூற முடியாது. 2010 இல் சகல செயற்திட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதற்கு நாம் இணங்கியுள்ளோம்.


கேள்வி: அடுத்த 5 வருடங்களில் இந்தியஇலங்கை உறவுகள் எவ்வாறு இருக்குமென நீங்கள் கருதுகிறீர்கள்?


பதில்: இது மிகவும் வலுவானதாக அமையும். கடந்த காலத்தில் சில விடயங்களை நாம் கொண்டிருந்தோம். இப்போது நல்ல உறவு உள்ளது. நாம் அவர்களைப் புரிந்துகொண்டுள்ளோம். அவர்கள் எம்மை விளங்கிக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியிலான தொடர்புகள்,வர்த்தகம், அரசியல்வாதிகள் மத்தியிலான தொடர்புகள் சிறப்பாகவுள்ளன.


கேள்வி:இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவால் பங்களிப்பு வழங்க முடியுமென நீங்கள் கருதுகிறீர்களா?


பதில்: எங்கள் மத்தியிலிருந்தே தீர்வானது வெளிவர வேண்டுமென நான் நினைக்கிறேன். உள்நாட்டிலிருந்தே தயாரிக்கப்பட்டதாக அது இருக்க வேண்டும். இங்கு அமுல்படுத்துவதற்கு வெளியிலிருந்து உங்களால் எதனையும் கொண்டுவர முடியாது. இதில் என்னவுள்ளது? என்பது பற்றியும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயங்களையும் நாம் தெரிந்திருப்பது அவசியம். பெரும்பான்மையினர் அதனை நிராகரித்தால் எம்மால் அதனை அலட்சியப்படுத்த முடியாது. ஆதலால் எந்தவொரு தீர்வும் சகல சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். 13 ஆவது திருத்தமானது இந்தியாவின் யோசனையாகும். அதனை நாங்கள் மாகாண சபைகளாக அறிமுகப்படுத்தியுள்ளோம். அதிலிருந்து அதனை நாங்கள் விருத்தி செய்ய வேண்டியுள்ளது.


கேள்வி: ஆதலால் 13 ஆவது திருத்தத்திலும் கூடியதென்பது யதார்த்தமானதாக உள்ளதா?


பதில்:அந்த பிளஸ் என்னுடையது. (சிரிக்கிறார்) ஆம், அதுதான் யதார்த்தம். முதலில் தமிழ்க் கட்சிகளுடன் நான் கலந்துரையாட விரும்புகிறேன். மத்திய அரசுடன் மாகாணங்கள் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா என்பது குறித்து நாம் ஆராய விரும்புகிறோம். இது மிகவும் முக்கியமானதாகும்.


கேள்வி: அதனால் தான் மேற்சபையை அமைக்கும் யோசனை வருகிறதா?


பதில்: ஆம்.


கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்துடன் தீர்வொன்றைக் காண்பதற்கான சூழ்நிலையானது அதிகளவுக்கு உகந்ததாக இருக்கின்றதென நீங்கள் நினைக்கிறீர்களா?


பதில்: ஆம், ஆனால், எமது நெருக்கடிகளை அவர்கள் விளங்கிக்கொள்வது அவசியமாகும். அத்துடன்,பெரும்பான்மையினரின் கவலைகளைப் பற்றியும் விளங்கிக்கொள்வது அவசியம்.


கேள்வி: பெரும்பான்மையினரின் அச்சம் பற்றிக் கூறுகிறீர்களா?


பதில்: சகலரினதும் பீதிபற்றி கூறுகிறேன். அவர்கள் இவை யாவற்றையும் விளங்கிக்கொள்வது அவசியம். பெரும்பான்மை இல்லாவிடில் இதனை அமுல்படுத்த முடியாது. இதுவே 13 ஆவது திருத்தத்திற்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த விடயங்களை வைத்திருக்க விரும்புவது புலம்பெயர்ந்த சமூகம் மட்டுமே. மோதலைத் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிறது. இளம்தலைமுறை அதற்கப்பால் நகர்ந்துவிட்டது. இப்போது இளையதலைமுறை தமிழ்த் தலைவர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.


கேள்வி: போரின்போது தமிழ் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர். அவர்கள் தொடர்பாக தங்களுடைய தொலைநோக்கு என்ன?


பதில்: தென் பகுதியானது தங்கத்தைப் பெறுகின்றபோது வடக்கிற்கும் கிழக்கிற்கும் உங்களால் இரும்பைக் கொடுக்க முடியாது. அவர்களுக்கும் நான் தங்கத்தைக் கொடுக்கவே விரும்புகிறேன். இது மிகவும் இலகுவான பதிலாகும். கடந்த 30 வருடங்களாக அவர்கள் இவற்றைப் பெற்றிருக்கவில்லை. பாரபட்சம் எதுவும் இல்லையென்று அவர்கள் உணரப்பட வேண்டும்.


கேள்வி: புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ன மாதிரியாகவுள்ளன? மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு என்பனவற்றின் முழுமையான நடவடிக்கைகள் கொண்ட கட்டமைப்பு உள்ளதா?


பதில்: ஆம், எம்மிடம் அதற்குரிய திட்டம் ஒன்று உண்டு. ஜனாதிபதி செயலகப் பிரிவை நான் நியமித்துள்ளேன். அந்தப் பிரிவானது அரச முகவரமைப்புகளுடன் இணைந்து முழு நடவடிக்கைகளையும் அமுல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றை நாம் மெதுவாக அமுல்படுத்தி வருகிறோம். முதலாவது கட்டம் கண்ணிவெடி அகற்றுவதாகும். இரண்டாவது கட்டம் மக்களை அங்கு அனுப்புவது. மீள்குடியேற்றும் போது வீதிகள்,மருத்துவமனைகள்,பாடசாலைகள் கிராம சேவகர் அலுவலகம்,பிரதேச செயலகம் என்பன அவசியமாகும். இன்னரும் 47 ஆயிரம் பேரை மட்டுமே மீள்குடியேற்ற வேண்டியுள்ளது. இவர்களில் 19 ஆயிரம் பேர் உறவினர்களுடன் உள்ளனர்.


கேள்வி: இந்த நடவடிக்கைகளுடன் உள்ளூர் மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது அவசியமென கருதுகிறீர்களா? வட மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கான திட்டமுள்ளதா?


பதில்: அவர்களுக்குப் பிரதேச சபைகள் அவசியம். அடுத்த கட்டமாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. ஆனால், எமக்கு சிறிதளவு கால அவகாசம் தேவை.


கேள்வி: கிழக்கு மாகாண முதலமைச்சர் எந்தவொரு அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லையென முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது. அமுலாக்கல் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறதே?


பதில்: அதில் அவர் சகல அதிகாரங்களையும் கொண்டுள்ளார். இப்போது அவர் வெளிநாட்டுக்குப் போயுள்ளார். 27 உறுப்பினர்களை அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பணத்தின் மூலம் சில வீதிகளை அமைத்திருக்கலாம் என நான் நினைத்தேன். இவற்றை நாம் கட்டுப்படுத்துவதில்லை.


கேள்வி: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட தமிழ்,முஸ்லிம் கட்சிகள் தங்களது சொந்தக் கட்சியின் பெயரையோ,சின்னத்தையோ பயன்படுத்தவில்லை. அவற்றை தேசியக் கட்சிகளில் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது அவர்கள் சுயாதீனமான கட்சிகளாக இருக்க வேண்டுமெனக் கருதுகிறீர்களா?

பதில்: பிரதான அரசியல் கட்சிகள் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. இந்த ஆட்கள் அந்தப் பகுதிகளில் மட்டும் நின்றுவிடக்கூடாதென நான் கருதினேன். அந்தப் பகுதிகளுடன் மட்டும் நிற்கும் அரசியல் கட்சிகள் இனவாதத் தன்மையாக வரக்கூடும். தேசியக் கட்சிகளுடன் இணைவது சிறப்பானதாகும். அவர்கள் பெரும்பான்மையினருடன் இணைந்துகொள்ள வேண்டும். தமிழரோ,சிங்களவர்களோ,முஸ்லிம்களோ அவர்கள் யாவரும் நாட்டின் பிரஜைகள். அவர்கள் வேறுபட்ட பிரஜைகள் அல்ல.


கேள்வி: ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றுவதற்குத் திட்டமிடுகிறீர்களா?


பதில்: சில திட்டங்கள் உள்ளன. நான் பாராளுமன்றம் செல்ல விரும்புகிறேன். மக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. நான் பாராளுமன்றத்தை தவறவிட்டுவிடுகிறேன்.


கேள்வி: பாராளுமன்றத்திற்குச் செல்வது மட்டுமா? அல்லது பாராளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் கடப்பாடு உடையதாக ஜனாதிபதி பதவியை மாற்றுவதற்கான யோசனையா?


பதில்: இப்போது உத்தேசிக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் மூன்று மாதத்துக்கு ஒருதடவை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குச் சமூகமளிக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் வைபவ ரீதியான ஜனாதிபதி முறைமை குறித்தும் யோசனைகள் உள்ளன. இது முழு நாட்டையும் ஸ்திரமில்லாத நிலைக்குக் கொண்டு செல்ல விரும்புவோரின் யோசனையாகும். அவர்கள் வலுவான தலைவரை விரும்பவில்லை.


கேள்வி: சரத் பொன்சேகாவின் எதிர்காலம் என்ன? அவர் தொடர்ந்தும் சிறையில் உள்ளாரே?


பதில்: அறிந்துகொள்ள நான் ஆர்வம் காட்டவில்லை. வழக்கு உள்ளது. அவர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட நான் கவலைப்படமாட்டேன். இந்த விடயம் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்டது. நான் தலையிட மாட்டேன். வெற்றியின் பின்னர் மேலும் இரண்டு இலட்சம் படைவீரர்களை அவர் திரட்ட விரும்பினார். ஏன் என்று அவரிடம் கேட்டேன். சகல இடத்திலும் சிறிய சிறிய இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறினார். அவ்வாறு செய்ய முடியாதென நான் கூறினேன். சட்டம்,ஒழுங்கைப் பேணுவது பொலிஸாரின் பணியென நான் கூறினேன். வெளிமட்ட அச்சுறுத்தலிருப்பதாக அவர் தெரிவித்தார். எங்கிருந்து என்று அறிந்துகொள்ள விரும்பினேன். இந்தியாவிடமிருந்து என்று அவர் சொன்னார். நான் அதனைக் கையாள்வதாக அவருக்குக் கூறினேன். அதுவே அவரின் மனப்பாங்காக இருந்தது. அவர் முழு உலகத்துடனும் சண்டையிட விரும்பினார்.


கேள்வி: போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக அவர் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாரே?


பதில்: பாராளுமன்றத்தில் அவர் இருக்கும்போது நேர காலத்துடன் அங்கு போகின்றார். நாள் முழுக்க அங்கிருக்கின்றார். தாங்கள் வீட்டுக்குப் போக வேண்டியிருப்பதாக அலுவலர்கள் அவருக்குக் கூறும்வரை அவர் அங்கு இருக்கின்றார்.அங்கு அவர் சகல சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ளுகிறார். ஆட்களுடன் கதைக்கிறார்.
கேள்வி: நீங்கள் மூன்றாவது பதவிக் காலத்தைப் பெற்றுக்கொள்வீர்களா? எவரும் இரு தடவை மட்டும் ஜனாதிபதி பதவியை வகிக்கும் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக வதந்திகள் காணப்படுகின்றனவே?


பதில்: அதற்கு நீங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 6 வருடங்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் இருப்பதற்கு நான் முன்னுரிமை கொடுக்கிறேன். ஆனால், அதன் பின் 6 வருடங்களின் பின்னர் நான் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானிக்கவும் கூடும். ஆதலால் இதுவொரு தனிநபரினதோ,பிரஜையினையுடையதோ ஜனநாயக உரிமையாகும். அதாவது போட்டியிடும் ஒருவரின் ஜனநாயக உரிமை என்று நான் எப்போதும் கூறுகிறேன். இது தொடர்பாக மக்கள் தீர்மானிக்கட்டும். தமது தலைவர்களைத் தெரிவு செய்வது மக்களின் உரிமையாகும். தோல்வியுடையவருக்குக் கட்டுப்பாடில்லை. அவர் போட்டியிட முடியும்.ஆனால், வெற்றியடைபவர் இரு தடவைகளுக்கு மேல் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை.

No comments:

Post a Comment


Followers