Pages

Wednesday, June 30, 2010

செல்வா டைரக்ஷனில், `நாங்க' ஒரே படத்தில், 5 காதல் கதைகள்


Wednesday, June 30, 2010
செல்வா டைரக்ஷனில், `நாங்க'ஒரே படத்தில், 5 காதல் கதைகள்

தலைவாசல், நான் அவன் இல்லை உள்பட பல படங்களை டைரக்டு செய்த செல்வா, அடுத்து `நாங்க' என்ற புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இது, 5 வித்தியாசமான காதல் கதைகளை கொண்ட படம். 5 காதல் கதைகளும் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் ஒரே நேர்க்கோட்டில் இணையும் வகையில், புதுமையாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

செல்வா டைரக்டு செய்யும் 25-வது படம் இது. முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதை. சம்பவங்கள் முழுவதும் 1985-ல் நடைபெறுவது போல் திரைக்கதை அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் வாசுராவின் மகன் முனீஷ், பழம்பெரும் நடிகர் தயாளனின் மகன் நிவாஸ், தயாரிப்பு நிர்வாகி குருசாமியின் மகன் வினோத், டைரக்டர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய், மலையாள பட தயாரிப்பு நிர்வாகியின் மகன் விவேக், மற்றொரு தயாரிப்பு நிர்வாகி சசியின் மகன் அருண், லட்சுமி மூவி மேக்கர்ஸ் சாமிநாதனின் மகன் அஸ்வின், நடிகர் பெரிய கருப்ப தேவரின் மகன் விருமாண்டி ஆகியோர் இந்த படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.

சென்னையை சேர்ந்த அரசி, கேரளாவை சேர்ந்த விஷ்ணுப்ரியா, ஷிவானி, பெங்களூரை சேர்ந்த வைதேகி ஆகியோருடன் நடிகை கஸ்தூரியும் கதாநாயகியாக நடிக்கிறார்.

பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். பாலபாரதி இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார் செல்வா. சினிமா கொட்டகை என்ற நிறுவனம் சார்பில் இந்த படம் தயாராகிறது.

படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி, தொடர்ந்து நெல்லை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

*** *********************************************************************************************

இளம் குற்றவாளிகளின் கதை படமாகிறது
கஸ்தூரிராஜாவின் `அசுரகுலம்'

டைரக்டர் கஸ்தூரிராஜா தயாரிப்பாளராக மாறி, `யாரடி நீ மோகினி' படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, `அசுர குலம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இது, இளம் குற்றவாளிகளை பற்றிய படம். குடிசைப்பகுதிகளில் வசிக்கும் இவர்களை இயக்குவது யார், இவர்களின் முடிவுதான் என்ன? என்பதை கதை விளக்குகிறது.

புதுமுகங்கள் பிரேம்நசீர், திலீப், சங்கர், சந்துரு, சானியா ஆகியோருடன் வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் பாலாஜி டைரக்டு செய்கிறார். இவர், டைரக்டர் செல்வாவிடம் உதவி டைரக்டராக இருந்தவர். ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் கஸ்தூரிராஜா, டாக்டர் விமலகீதா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு: சிராஜ் நிஷா.

படப்பிடிப்பு சென்னை கற்பகம் ஸ்டூடியோவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

*** ********************************************************************************

சசிகுமாரின் உதவியாளர் இயக்கும்
சிகப்பு கம்பளம்'

கோபிகா இண்டர்நேஷனல் சார்பில் ராஜேஷ் கோபிநாத் தயாரித்து வரும் படம், `விருந்தாளி.' இந்த படம், அடுத்த மாதம் (ஜுலை) திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ராஜேஷ் கோபிநாத் தயாரிக்கும் இரண்டாவது படத்துக்கு, `சிகப்பு கம்பளம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதை-திரைக் கதை-வசனம் எழுதி,டைரக்டராக அறிமுகம் ஆகிறார், எஸ்.ஆர்.பிரபாகரன். இவர், டைரக்டர் சசிகுமாரிடம் உதவி டைரக்டராக இருந்தவர். சசிகுமாரின் `சுப்பிரமணியபுரம்' படத்திலும், இப்போது அவர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் பிரபாகரன் உதவி டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார். டைரக்டர் எஸ்.டி. சபாவிடம் துணை இயக்குனராக இருந்திருக்கிறார்.

முகம் பார்த்து பழகாதே...அகம் அறிந்து பழகு'' என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. எஸ்.எஸ்.குமரன் இசையமைக்கிறார். சிங்கம்புலி வசனம் எழுதுகிறார்.

படத்தில்,புதுமுகங்களுடன் முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கு பெறுகிறார்கள்.

*** *********************************************************************************

100 அடி ஆழமுள்ள தொட்டியில், 110 லாரி தண்ணீரை நிரப்பி
ஏவி.எம். ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட செயற்கை ஏரி
யுனிக் புரொடக்ஷன்ஸ் வழங்க,அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம், கனிமொழி.' இந்த படத்தில் ஜெய், ஷஜான் பதம்சி, விஜய் வசந்த் ஆகிய மூவரும் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.

எல்லோருக்கும் ஆசைகள், கனவுகள் இருக்கும். இது நடந்தால் நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கும் ஒருவன்தான் ராஜேஷ். `விஸ்காம்' படிக்கும் கல்லூரி மாணவர். அவர் சந்திக்கும் ஆழமான-அழுத்தமான சம்பவங்களும், சந்திப்பு களுமே கதை. கல்லூரி மானவர் ராஜேசாக ஜெய் நடிக்கிறார்.

கதாநாயகி ஷஜான் பதம்சி, ராக்கெட் சிங்' என்ற இந்தி படத்தில் நடித்தவர். மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்.ஜெய்-ஷஜான் பதம்சி சம்பந்தப்பட்ட ஒரு புதுமையான பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இதற்காக, ஏவி.எம். ஸ்டூடியோவில் 100 அடி ஆழத்தில், 60 அடி அகலத்தில் ஒரு பிரமாண்டமான தொட்டி கட்டப்பட்டது. அதில் 110 லாரி தண்ணீரை நிரப்பி, ஒரு ஏரி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அரங்கை அமைத்தவர், எட்வர்ட் கலைமணி. ஏரியின் மீது பறந்தபடி கதாநாயகனும், கதாநாயகியும் `டூயட்' பாடுவது போல் படமாக்கினார்கள்.

பி.சிதம்பரம் ஒளிப்பதிவில், ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்தார். இவர், வெங்கட்பிரபுவிடம் உதவி டைரக்டராக இருந்தவர். ``கனிமொழி என்பது எந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் அல்ல. படத்தின் சாரம் உணர்த்தும் பெயர்'' என்கிறார், டைரக்டர் ஸ்ரீபதி ரங்கசாமி.

No comments:

Post a Comment


Followers